Punnagai | GANDHI CHALLENGE - நீங்கள் தயாரா?

லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இன்று மது போதையில் தத்தளிக்கின்றனர். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, இன்று குடி நோயில் வீழ்ந்து கிடக்கிறது.
வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நிரந்தர நோயாளியாக மாற்றிவிடும் என்பது வீட்டில் பூச்சிகள் போல் வீழ்ந்து மடியும் இளைஞர்களுக்கு தெரிவதில்லை.
ஆரம்பத்தில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மதுவை சுவைக்கிறார்கள். முதலில் வெறும் பீர் என்று தொடங்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமுள்ள மது பாட்டில்களை பழக்கமாக்கி கொள்கிறார்கள். பின்னர் மதுவின் கொடுமை பற்றி புரிந்தும் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் குடி நோயாளியாகி மானம்கெட்டு மடிகிறார்கள்.
மதுவினால் எத்தனை சண்டைகள், எத்தனை அவமானங்கள், எத்தனை கொலைகள், எத்தனை தற்கொலைகள்..?
"மது போதை என்பது தற்காலிக தற்கொலைக்குச் சமம்" என்றார் பெர்ட்ரண்ட் ரஸல் என்ற பேரறிஞர்.
"சமுதாயத்தில் மதிக்கப்பட விரும்புகிறவர்கள் எவரும் மதுவைத் தொடவேண்டாம்" என்றார் திருவள்ளுவர்.
"மது ஒருவரின் உடல்நலம், மானம், அறிவு, செல்வம், நற்பண்புகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது" என்றார் காந்தியடிகள்.
மது, மனித உணர்வுகளையும், உடல் நலத்தையும் அழிக்கும் ஒரு நச்சுப் பொருள். மதுவினால் கிடைக்கும் மயக்கம் அற்பமானது, எதிர்மறையானது. அந்த மயக்கத்தால் கவலைகளோ துன்பங்களோ குறைவதில்லை - நிச்சயம் அவை அதிகரிக்கின்றன
குடிப்பதால் குடிப்பவர்க்கு ஏற்படும் பிரச்சனைகள் :
- வயிற்றில் புற்று நோய் ஏற்படுகிறது.
- கல்லீரல் தடித்து பருமனாகி, ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல் திறனை இழக்கிறது.
- சிறுநீரகத்தின் செயல் திறன் குறைந்து ஆபத்தான சூழல் ஏற்படுகிறது.
- மூளையின் செயல் திறன் குறைகிறது. சிலருக்கு மன நோய் ஏற்படுகிறது.
- இதயம் ஊதிப் பெரிதாகி மாரடைப்பு ஏற்படுகிறது.
குடிப்பதால் ஏற்படும் சமுதாய பிரச்சனைகள் :
- திருட்டு, பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களைப் புரியும் சூழல் அதிகரிக்கிறது.
- வேலை நேரமும் வேலைத் திறனும் குறைகிறது.
- குடித்துவிட்டு வாகனம் செலுத்துவோரால் விபத்துகள் ஏற்படுகின்றன
- குடும்ப அமைதி குலைந்து மணமுறிவு ஏற்படுகிறது.
- குடிப்பவரின் குழந்தைகள் மானம்கெட்டு அனாதைகள் ஆகின்றன.
மதுவினால் தனி மனிதனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெரும் கேடு விழைகிறது.
எனவே ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை விரும்பும் எவரும் மதுவைத் தொடாதீர்கள்.
மது அருந்தினால் வருவது வெட்கக் கேடு!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தன்னம்பிக்கையை நாடு!
இந்த தகவலை எடுத்துச்சொல்லி, உங்களையே, உங்களை சார்ந்த ஒருவரையோ மதுவை நாடாத மனிதனாக மாற்றிவிட்டால் நீங்கள் GANDHI CHALLENGE இல் வெற்றிபெற்றவர் ஆவீர்.
நீங்கள் திருவள்ளுவரின் வழித்தோன்றல்..!
காந்தியின் வாரிசு..!
புன்னகையின் நண்பர்..!
காந்தி சவாலை இப்போதே ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதனை லைக் செய்யுங்க.. ஷேர் செய்யுங்க..!
Comments
Post a Comment