Punnagai | GANDHI CHALLENGE - நீங்கள் தயாரா?
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் இன்று மது போதையில் தத்தளிக்கின்றனர். கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி, இன்று குடி நோயில் வீழ்ந்து கிடக்கிறது. வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நிரந்தர நோயாளியாக மாற்றிவிடும் என்பது வீட்டில் பூச்சிகள் போல் வீழ்ந்து மடியும் இளைஞர்களுக்கு தெரிவதில்லை. ஆரம்பத்தில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மதுவை சுவைக்கிறார்கள். முதலில் வெறும் பீர் என்று தொடங்கி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விஷமுள்ள மது பாட்டில்களை பழக்கமாக்கி கொள்கிறார்கள். பின்னர் மதுவின் கொடுமை பற்றி புரிந்தும் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் குடி நோயாளியாகி மானம்கெட்டு மடிகிறார்கள். மதுவினால் எத்தனை சண்டைகள், எத்தனை அவமானங்கள், எத்தனை கொலைகள், எத்தனை தற்கொலைகள்..? "மது போதை என்பது தற்காலிக தற்கொலைக்குச் சமம்" என்றார் பெர்ட்ரண்ட் ரஸல் என்ற பேரறிஞர். "சமுதாயத்தில் மதிக்கப்பட விரும்புகிறவர்கள் எவரும் மதுவைத் தொடவேண்டாம்" என்றார் திருவள்ளுவர். "மது ஒருவரின் உடல்நலம், மானம், அறிவு, செல்வம், நற்பண்புகள் அனைத்தையும் அழித்துவிடுகி...