பாஜவுக்கு எதிரான கூட்டணியின் பெயர் ‘இந்தியா’! 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு! வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போட்டியாக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா' என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன.* மேலும் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் முயற்சி மேற்கொண்டார். இதை தொடர்ந்து கடந்த மாதம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, சிவசேனா உள்பட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.* அந்த கூட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் 2 நாட்கள் நடந்தன. பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்டன்ட் நட்சத்திர ஓட்டலில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.* இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, க...